Monday, June 05, 2006

தேவதைகளின் சொந்தக் குழந்தை(பின் நவீனச் சிறுகதைகள்)

தேவதைகளின் சொந்தக் குழந்தை(பின் நவீனச் சிறுகதைகள்)எச்.முஜீப் ரஹ்மான்முன்னுரைபுனைக்கதைகள் எழுதி எழுதித் தேய்ந்து விட்டன.தேய்ந்த கத்தியை மேலும் மேலும் தேய்த்து அதன் மொண்ணைத்தன்மையை நீக்கும் முயற்சி தான் இப்போது எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. முஜீப் ரஹ்மான் தனது "தேவதைகளின் சொந்தக் குழந்தை" என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம்இதமிழ்ப் புனைகதையை அதன் மொண்ணைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்க்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது. காஉப்காஇஆந்த்ரே ழீத்இகொர்த்தஸார்இஜே.ஆர்.ஆர்.டோல்கின் என்று விரியும் இவரது வாசிப்புஇ எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை தேடி அலைவதைக் காட்டுகிறது.இந்த அலைச்சலே இவரை இது போன்ற சிறுகதைகளை எழுதுவதற்க்கு உந்தி இருக்கிறது என்லாம். பின் நவீனத்துவ கூறுகளில் ஒன்றான "புதியன களைதலும்இபழையன புகுதலும்" என்ற செயல்பாடு இவரது கதைகளில் சாத்தியப்பட்டிருக்கிறது.நவீன எதார்த்த சிறுகதை மரபுக்கு எதிராக பழைய கட்டு கதை மரபை இவர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.இதனால் இக்கதைகள் பிரதியின் வேட்கையை ஒத்திப் போடுகின்றன.இந்த ஒத்திப்போடுதல் இக்கதைகளை நெடுநீளாய்வுக் கதைகளாக மாற்றுகின்றன.எனவே தன்னளவில் இத்தொகுப்பு தன்னை ஒரு பின் -நவீனச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக உருமாற்றிக் கொண்டு விடுகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.பதினாறும் பதினாறு விதமான கதைகள்.ஆனால் இவை எல்லாமே கட்டுக்கதை மரபுக்குரியவை.μயாமல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யதார்த்தக் கதை குவியலிலிருந்து வெளிப்படும் புழுக்கத்தையும் வெப்பத்தையும் தணிக்க வந்த கதைகளாகவே இவை எனக்குக் காட்சியளிக்கின்றன.சில கதைகளில் போர்ஹேயின் வாரிசாக முயற்சித்திருக்கும் இவர் சில கதைகளில் உம்ப்ர்டோ ஈகோவின் சீடராக மாற முயற்சித்திருக்கிறார். இக்கதைகள் பெருங்கதையாடல்களைத் தகர்க்கின்றன.குறுங்கதையாடல்களை விளையாட்டாக உருவாக்கிக் காட்டுகின்றன.இந்துக் கலாச்சாரம்இஇஸ்லாமிய கலாச்சாரம் என்ற மையமும்இவிளிம்பும் கலைக்கப்பட்டு ஒருவித பொதுமையான கலாச்சார வகைமையைக் கட்டமைத்துக் காட்டும் காரியத்தை இக்கதைகள் செய்கின்றன. இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் ஏற்கனவே சிற்றிதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.பரிசுகள் பெற்றிருக்கின்றன என்ற விஷயம் மனதுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.இல்லாவிட்டால் இது போன்ற முயற்சிகள் அருகிவிடக்கூடும். கடினமான கோட்பாடுகளை வாசிப்பவர்களுக்கு கதைகள் எழுத வராது.கதை எழுதுபவர்களுக்கு கோட்பாடுகளோடு பரிச்சயம் இருக்காது.நண்பர் முஜீப்புக்குக் கோட்பாடுகளிலும் நல்ல தேர்ச்சி இருக்கிறது.கதை எழுதுவதும் கைகூடி வந்திருக்கிறது.இது ஒரு நல்ல இணைவு. தமிழைப் பொறுத்தவரை பின் நவீனத்துவ எழுத்துக்களின் வருகை என்பது மிகக் குறைவே.கறாராகச் சொல்வதாக இருந்தால்இ தமிழில் ரமேஷ்-பிரேமினுடைய மற்றும் என்னுடைய பிரதிகள் நீங்கலாகஇ வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பின்நவீனத்துவ பிரதிகள் என்று எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.இச்சூழலில் ஒரு நம்பிக்கையூட்டும் பின் நவீன எழுத்தாளராக முஜீப் ரஹ்மான் என் கண்களில் படுகிறார்.அவரது இத்தொகுப்பை ஒரு வெற்றி என்று என்னால்இதாராளமாகச் சொல்ல முடியும்.அவர் தொடர்ந்து இயங்கி மேலும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை.
வாழ்த்துக்களுடன்
எம்.ஜி.சுரேஷ்

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்படைப்பிலக்கியம் மற்றும் இஸ்லாமிய ஆய்வாளர்.
தமிழ் சூழலில் ஊடிழைப்பிரதிஇபிரதியின் இன்பம்இவாசக தனம் வேறுபாடான கண்ணோட்டத்துடன் தொழிற்ப்பட்டிருக்கிறது.அது போல பழமையின் பூரிப்பு என்பதும் சரியாக உருவாகவில்லை.பின்நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களில் நாம் தொடர்ந்து இவைப் பற்றி விதாதித்த போதும் படைப்புகளில் சரிவர உருவாகவில்லை.அதி எதார்த்தம் கூட பேசுகிறோம்.பயனீட்டு மதிப்பையும்இபரிவர்த்தனை மதிப்பையும் தாண்டி குறியீட்டு மதிப்பு எப்போது உருவானதோ அதுவே அதி எதார்த்தம் எனப்படும்.மீபிரதி படைப்புகள் வாசக ஊடாட்டத்துடன் புதிய தளத்தில் உருவாகியுள்ளது.வாசகனை இன்னொரு உலகுக்கு கொண்டு செல்லும் மாஜிகலும்இபாண்டசியும் கூட மரபான இலக்கிய வடிவங்களிலிருந்து புதுவகை இலக்கிய படைப்புக்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்பவைகளுக்கு அத்தாட்சியாக இருக்கிறது.நவீனத்துவம் தமிழில் உருவ ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் தனிமனிதனுக்கு முக்கியத்துவத்தை அளித்தது.ஆனால் பின்நவீனத்துவமும் சரி பின்காலனியமும் சரி விளிம்புகளை கவனத்தில் கொள்கிறது.அப்போது படைப்பின் குணங்களும் மாறத்தொடங்கியது.முஜீப்பின் இத்தொகுப்பை பார்கிற போது மரண ஓலங்கள்இஅழுகைகள்இகொடூரங்கள்இவன்முறைகள்இகதறல்கள் ஆகியவை திருப்பி திருப்பி எதிரொலிக்கிறது.சாதாரணமாக மாஜிகலிலும்இபாண்டசியிலும் சொல்லப்பட்டிருந்தாலும் மனித உணர்வுகளை கசக்கி பிளியும் கதைகளே நிறைய இருக்கிறது.அதீததமான புனைவை நாம் மனிதவாழ்க்கையின் பல்வேறு நெருக்கடிகளை இன்னொரு புனைவின் மூலம் போர்த்தும் போது ஜீவமரண போராட்டங்களே இதன் குணமாக மாறும் புனைவின் வினோத குணம் மொழியின் தன்மை வாசகனை மெல்ல மெல்ல எதர்த்தத்தை புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.நமது தொன்மங்களாகட்டும்இபழங்கதைகள் ஆகட்டும்.தேவதை கதையாகட்டும் எல்லாமே வலுவான எதார்த்தச் சூழலைக் கொண்டிருக்கிறது.இஸ்லாமிய மரபுகள் சார்ந்த ஆயிரத்தொரு அராபிய இரவுகளும்இசிந்து பாத் கதைகளுஇஅலிபாபா கதைகளும் மனித வாழ்வின் இருப்புக்கும்இமரணத்துக்குமான போராட்டமாக இருப்பதை காணலாம்.இந்த கதை தொகுப்பில் சதுரங்க ஆட்டத்தில் அதிரும் மகோனதங்கள் என்ற கதை இருக்கிறது.சதுரங்க ஆட்டத்தில் தலைமூளையை பந்தயம் வைத்து விளையாடிஇதோற்ற ஒருவன் மரணத்தினை ஒப்பு கொடுக்க வந்து கடைசியாக ஒருமுறை கூட விளையாடி தனது மரணத்தை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து முடிவில் மரணத்தை ஜெயித்து விடுகிறான்.கதையுலகம் கற்பனையின் சாத்தியங்களை தீவிரமாக சொல்லி நிஜத்தை பாதுகாக்கிறது.மேலும்இதொகுப்பில் உப்பாவை சொல்லும் கலை என்பது பகடி செய்தலை முன்னிறுத்தி திராவிட அரசியலை அல்லது இஸ்லாமிய அரசியலை பேசுகிறது என்று சொல்லமுடியும்.இஸ்லாமிய கதைமரபுகள் இக்கதைகளில் ஊடிழைப்பிரதிகளாக மாறியிருக்கிறது என்பதை சொல்லமுடியும்.
முக்கிய குவிமையங்கள்:பின்நவீன படைப்புச் சிக்கலகள்அதி எதார்த்தம்இமீபிரதி படைப்புகள்படைப்பின் குவிமையம் ஜீவ மரண போராட்டங்களேஇஸ்லாமிய கதை மரபுகள்மரணத்தை ஒத்திபோடும் கதைகள்
விவாதமையங்கள்:படைப்புக்கும் கோட்பாட்டுக்குமான சிக்கல்கள்நவீன கதைக்கும் பின்நவீன கதைக்குமான வித்தியாசங்கள்படைப்பில் மெட்டபர்இபடிமம்இகுறிஇகுறியீடுஇகுறிப்பான் செயல்படும் விதங்கள்
பதிவுகள்:§ பன்முகத்தன்மை என்பதற்காக மரபு சார்ந்த ஆதிக்க வடிவங்களை பின்பற்றுவது கூட அராஜகமே
§ விமர்சன அராஜகம் மூலம் படைப்பினை சிதைத்தல் ஏற்புடையதன்று

உக்;க்கிட் ப்ர்க்ய்;லுக்; கஇய்சிறுகதையிலிருந்து
பேராசிரியர் முனைவர் முத்துமோகன் குருநானக் இருக்கை மதுரை காமராஜ் பல்கலை கழகம்
தமிழ் சிறுகதை வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகளால் சிறுகதையின் எழுச்சி வீரியமிக்கதாகவே இருந்து வருவதை பார்க்கிறோம்.எல்லாவகைப்பட்ட கதைகளும் தமிழ் வாசகர்களால் வரவேற்பு பெற்றுள்ளதையும் காணமுடிகிறது.அந்த வகையில் தற்போது பின்நவீனச்சிறுகதைகள் வெளிவந்திருக்கிறது.ஜரோப்பாஇஅமெரிக்காஇஇலத்தீன் அமெரிக்கா முதலிய எழுத்தாளர்களுக்கு நிகரனான படைப்புகள் தமிழில் வருவது ஆரோக்கியமான விஷயமே.தூயதுஇமோசமானதுஇவெகுஜனமானதுஇதீவிரமானது என்கிற எல்லைக்கோட்டுகளைத் தாண்டி தமிழில் புதுவரவாக தேவதைகளின் சொந்தக் குழந்தை அமைந்திருக்கிறது முஜீப் ரஹ்மானின் இக்கதைத் தொகுப்பு பின்நவீனச்சிறுகதைகள் தான் என்பதை என்னால் உறுதிபடச் சொல்லமுடியும்
கவிஞர் நட.சிவகுமார்.தலித்திய எழுத்தாளர்
முஜீப் ரஹ்மானின் சிறுகதை தொகுப்பை வாசிக்கிற போது கிடைத்த அனுபவம் எச்பிஓ சானலை பார்பதற்க்கு ஒப்பானது.சிறந்த கதைகள் என்பவை பொதுவாக படைப்பனுபவத்தை வாசக அனுபவமாக மாற்ற வேண்டும்.அந்த விததில் இக்கதைகள் வெற்றிப்பெற்றுள்ளது.உதாரணமாக நான் ஒரு பறவை மனிதன் கதையானது இஸ்லாமிய நம்பிக்கைகளையும்இஅனுபவங்களையும் கொண்டிருக்கிறது.இஸ்லாம் சார்ந்த விஷயங்கள் எதார்த்தமானவை தானே.கதையில் கதைச்சொல்லி பறவையாக உருமாறும் போது எதார்த்தமும் உருமாறி விடுகிறது.காப்காவின் கதாநாயகன் உருமாறுவானே அது போல.இந்த கதை காலங்களை குலைத்து போடுவதினூடாக கதையை நகர்த்திக்கொண்டே இருக்கிறது.கதையில் வருகிற சூபியும்இவினோத நூலும் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த உரையாடல்களை சொல்லுவதாக அமைகிறது.முஜீப்பினுடைய கதைகளுக்கு வலுவான தளம் இருக்கிறது.புனைவுகள்இதத்துவம்இகோட்பாடுகள்இமரபுகள்இவரலாறுகள்இவிமர்சன நோக்குகள் போன்ற பல்வேறு பிண்ணனிகளே இப்படி எழுதப்பட்டிருக்கிறது.தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாந்திரீக எதார்த்த கதைகளில் முஜீபின் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.இக்கதைகளை எழுதுவதற்க்கு பின்னாலுள்ள முயற்சிகளை நாம் பார்க்கும் போது மட்டுமே இதன் பலம் புரியகூடும்.பின்நவீனத்துவம் சார்ந்து எழுதுகிற மேலைநாட்டு கதைகளில் போர்ஹேஇகால்வினோ போன்றோர்களின் தாக்கத்தை நாம் இப்படைப்புகளில் காண முடியும். உப்பாவைச் சொல்லும் கலை காலச்சுவடில் முதன் முதலாக பிரசுரம் ஆன போது தமிழ்ச்சுழலில் கடந்த பத்துவருடங்களில் வந்த சிறந்த கதைகளில் ஒன்றாக விமர்சிக்கப்பட்டது.அந்த கதையிலிருந்து ஒவ்வொருகதையும் அதனதன் தனித்துவத்துடன் இருப்பதை நாம் காணமுடியும்.சூரியன் உதிக்கும் திசை மேற்கு கதை வந்த போது தமிழில் மிகச்சிறந்த கதையாசிரியர்களில் ஒருவராக மாறியிருப்பதை பலரும் சொன்னதை கேட்டிருக்கிறேன்.இந்த புகழுக்கு காரணமான உழைப்பை நாம் கண்டும் காணாமலும் விடமுடியாது.அதுபோல சமூக பிரக்ஞையுள்ள கதைகளாக இவை இருப்பதை காணலாம்.பின்லேடன் விவகாரம்இதடாசட்டம்இபலியிடுதல் தடைச்சட்டம்இஅமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுஇதலித்திய ஆதரவுஇவரலாற்று எழுத்தின் அரசியல்இஇஸ்லாமிய முரண்பாடுகள்இபாலின பேத எதிர்ப்பு போன்ற பல்வேறு விஷயங்களும் கதைகளாக மாறியிருக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள பின்நவீனசிறுகதைகளிலேயே சிறந்த கதைகளாக இவையிருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும்.
முக்கிய குவிமையங்கள்:கதையனுபவம் வாசகஅனுபவமாக மாறவேண்டும்இஸ்லாமிய வாழ்க்கை என்பதும் எதார்த்தமேகதைக்கான பின்னணியும்இஉழைப்பையும் கவனபடுத்தவேண்டும்சமகால சமூக பிரக்ஞைமிக்க கதைகள்
விவாதமையங்கள்:படைப்பனுபவம் வாழ்க்கையனுபமா இல்லையாசமூக பிரக்ஞை முக்கியமா அல்லது காலத்தை கடந்த கேள்விகள் முக்கியமாபடைப்பில் கோட்பாட்டின் தாக்கம் முக்கியமானதாக இருக்காதா
பதிவுகள்:§ கதைகளை விமர்சன பூர்வமாக அணுகாத குறை இருக்கிறது.§ விமர்சன அளவீடுகள்இமதிப்பீடுகள் படைப்பளியை முக்கியத்துவ படுத்துவது இன்றைய காலத்துக்கு பொருத்தமானதல்ல.படைப்பு வெற்றியடைந்துள்ளதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

கலைவாணன்எழுத்தாளர்
முஜீப் ரஹ்மானின் மொழி இடுகுறி தன்மை வாய்ந்தது.எதை சொன்னால் நன்றாக இருக்கும் என்ற தேர்வு அவரிடம் வலுவாக உள்ளது.அவரது மொழியும்இபுனைவும் திறந்த தன்மைகொண்டதினால் முற்றான முடிவாக இதைத்தான் சொல்ல வருகிறார் என்று சொல்ல முடியவில்லை.மற்றபடி கதைகள் வாசிப்பதற்க்கு நல்ல அனுபவமாக இருக்கிறது.
எம்.எம்.பாசில் அலி(நிதி நிர்வாகி) லண்டன் இங்கிலாந்து முஜீபுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.இணைய தளங்களில் அவரது கதைகளை படித்திருக்கிறேன்.அவர் மேலும் மேலும் சாதனைப் படைப்பார்.
முகமது அப்சல்(சாப்ட்வேர் இஞ்சினியர்) சின்சினாத்தி அமெரிக்கா
முஜீபின் தொகுப்பு வெளிவந்திருப்பது குறித்து நண்பர் சாதிக் டொரொண்டாவிலிருந்து சொன்ன போது அறிந்து கொண்டேன்.தொகுப்பு கிடைத்தவுடன் தமிழ் சங்கத்தில் விமர்சன கூட்டம் நடத்தப்படும்.வாழ்த்துக்கள்.
முனைவர்.பி.முருகன் அடிஸ்அபாபா பல்கலைக்கழகம் எத்தியோப்பியா
முஜீப்பின் தொகுப்பு வெளிவந்துள்ளதை பாராட்டுகிறேன்.இந்த தொகுப்பை கைஎழுத்து பிரதிகளாக வாசித்திருக்கிறேன்.நிச்சயமாக வாசகர்கர்கள் ஒரு சிறந்த எழுத்தாளரை இத்தொகுப்பின் மூலம் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
சி.சொக்கலிங்கம்மாநிலச்செயலாளர்இ த.க.இ.பெ
“தமிழ்ச்சுழலில் பின்நவீனத்துவம் சார்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் பரவலாக கவனத்தைப்பெற்று வரும் சூழலில் இக்கதைத்தொகுப்பு புதிய பரிணாமங்களை வழங்கியுள்ளது.நாம் மேஜிகல் ரியலிசம் பற்றி அதிகம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்இமேஜிகல் ரியலிசம் உலக வரைபடத்தில் நிகழ காரணமான விஷங்கள் என்ன என்று பார்க்க வேண்டியிருக்கிறது.எதார்த்தவாத கலையிலக்கிய மரபு பெரும்செல்வாக்கை செலுத்திய போதும் அதன் ஒற்றை அர்த்த நிலைபாடும் பன்முக எதார்த்தங்களை சுட்டிக்காட்டாத விதமும் நவீனத்துவத்தின் தாக்கம் உளவியல் எதார்த்தமாக சர்ரியலிசமாகஇஇருத்தலியல் வாதமாக ஒலித்த போது முன்வைக்கப்பட்டது.நவீனத்துவம் ஒருகாலச்சூழலாக உருவாகிய போது ரஷ்யாவில் சோசலிச எதார்த்தவாதம் தலைதூக்கியது.அப்போது பிரான்ஸ் ராஹ் என்பவர் 1920களில்போஸ்ட் எக்ஸ்பிரசனிச ஓவியங்களாக மேஜிகல் ரியலிசம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மேஜிகல் ரியலிசம் புழக்கத்துக்கு வந்தது.லத்தீன் அமெரிக்கச் சூழலில் அமெரிக்க எகாதிபத்தியத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டது.இன்று உலகமுழுவதும் பின்நவீன கலையுத்தியாக திகழ்ந்து கொண்டிருக்கும் மேஜிகல் ரியலிசம் தமிழில் தொண்ணூறுகளில் வந்தது.மேஜிகல் ரியலிசத்துக்கும் பாண்டசிக்கும் இடையே பாரதூரமான உறவே காணக்கிடக்கிறது. இந்தியசூழலில் ஜாதியகட்டுமானம் கொண்ட சமூகத்தில் விக்கிரமாதித்தியன் கதைகள் போன்று நிறைய காணக்கிடக்கிறது.மேலும் வாய்மொழி கதைமரபுகளும் நிறைய இருக்கிறது.இன்று பின்காலனித்துவம் பேசும் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் பேணபடவேண்டும் என்ற குரல் ஒலிக்கையில் மரபுகள் எனும் சொல்லாடலின் உள்கட்டுமானங்களையும் நாம் கணக்கிலெடுக்கவேண்டும்.நமக்கான மரபுகள் எதுஇதொன்மங்கள் எதுஇநம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் மீது சரியான அணுகு முறையுடன் பார்க்காவிடில் ஜாதியமரபுகளை நாம் ஏற்றுக்கொண்டதாக மாறிவிடக்கூடும்.நமது சூழலில் நவீனத்துவம் கூட மதநீக்கம் செய்யப்படாமல் மதத்தோடு தான் பயணித்தது.இந்த தொகுப்பை பொறுத்தவரையில் தமிழில் முக்கியமானதாகவே படுகிறது.பின் நவீனத்துவம் படைப்புரீதியாக சரியாக உருவாகியுள்ளதா என்பதை பார்க்கும் போது இந்த கதைகள் மிகவலுவாக இருக்கிறது.பழையன புகுதலும் புதியன கழிதலும் என்பதில் என்க்கு உடன்பாடில்லை.ஆனால் கதைகளில் சொல்லபடும் மேஜிகல் ரியலிசத்தை நான் பழையதாக பார்க்கவில்லை.இது முற்றிலுமாக புதியது.கதைகளைப் பொறுத்தவரையில் உப்பாவைச் சொல்லும் கலை மரபான கதைகளுக்கு எதிரான தளத்தில் இயங்குகிறது.இந்த கதையில் சொல்லப்படும் உப்பா யார் என்ற விவாதமே கடைசியில் வாசகனிடம் உருவாகிறது.பன்முக வாசிப்பில் மாத்திரமே இந்த கதையை புரிந்து கொள்ள இயலும்.மிகவும் வித்தியாசமான இந்த கதையில் கடைசிவரை உப்பாவை சொல்லவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.அதைத்தொடர்ந்து கனவை வரைந்து பார்க்கும் கனவியல்வாதி மேஜிகல் ரியலிச வகைப்பட்டதாகும்.இக்கதைகளில் நிலதோற்றங்களும்இநம்பகதன்மையும் இல்லாமல் சித்தரிப்புகளின் வாயிலாக ஒரு உலகை பார்ப்பதுபோல இருக்கிறது.புனைவு தர்க்கங்கள் மீறப்பட்டுள்ளன என்று சொல்லமுடியும்.இக்கதைகளின் தன்மைகள் பொதுவாக அறிவாதார மூலங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனமாக இருக்கிறது.”

முக்கிய குவிமையங்கள்:மேஜிகல் ரியலிசத்தின் தோற்றமும் வளர்ச்சியும்இந்தியகதைமரபுகளின் அரசியல்இந்திய நவீனத்துவத்தின் செயல்பாடுகள்தமிழில் பின்நவீனத்துவம்கதைகள் பற்றிய விரிவான பார்வை
விவாதமையங்கள்:மேஜிகல் ரியலிசத்துக்கும் பாண்டசிகுமான வேறுபாடுகள்மெட்டாபிக்சனுக்கும் ஸ்பெகுலெட்டிவ் பிக்சனுக்குமான வேறுபாடுகள்போர்ஹேஇஇடலோ கால்வினோ படைப்புகளின் குணங்கள்
பதிவுகள்:§ கதைகள் பற்றிய மரபான விமர்சனமுறையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தபோதும் விமர்சன பார்வை மரபான அணுகுமுறையிலேயே அமைந்திருந்தது.
§ தகவல்கள் பிரயோஜனமாக இருந்தது.இன்னும் அதிகமாக கதைகள் பற்றி விவாதிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes